fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். வணிகக் கல்லூரியில் இளைஞர் மாநாடு

கே.பி.ஆர். வணிகக் கல்லூரியில் இளைஞர் மாநாடு

கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் வணிகக்கல்லூரி மற்றும் வாவ் ஹெச்.ஆர். நிறுவனம் இணைந்து நடத்திய இளைஞர் மாநாடு 2025 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொறியியல், கலை, அறிவியல் கல் லூரிகள், மேலாண்மைக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு முன்னணி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், மாணவர்களுக்கான பல்வேறு தொழில், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும் நேரடி வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் கே.பி.ஆர். கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், கேபிஆர் கல்லூரியின் செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கே பி ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன், கே பி ஆர் வணிகக் கல்லூரி இயக்குனர் திவ்யா மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img