தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் கோவை நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நூலகத்துறையும் இணைந்து நடத்திய இளைஞர் இலக்கிய திருவிழா 2025 நேற்று வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
மாணவியர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் இரு நிமிடப் பேச்சு, புத்தகம் மதிப்புரை, இலக்கிய வினாடி வினா, ஹைக்கூ படைப்பு, ஓவியம் வரைதல், விவாத மேடை, பேச்சு போட்டி, கொலாஜ் மேக்கிங், பிராம்ட் இன்ஜினியரிங் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவிற்கான தொடக்க விழாவில் கோவை மாவட்ட தலைமை நூலகர் பி.ராஜேந்திரன், மாவட்ட நூலக கண்காணிப்பாளர் கே.கணேசன், நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் முனைவர் அருட் சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் போட்டிகளைக் கண்காணிப்பதற்காக மேற்பார் வையாளராக குனியமுத்தூர் நூலகர் உமாதேவி, பீளமேடு நூலகர் விஜயா மற்றும் நஞ்சுண் டாபுரம் நூலகர் சசீந்திரன் ஆகியோர் மாவட்ட அளவில் மாணவர்களுக்கிடையே நடத்தப் பட்ட இலக்கிய திருவிழா போட்டியில் பங்கேற்றதனை மேற் பார்வை செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.
கோவை மாவட்ட தலைமை நூலகர் ராஜேந்திரன் பேசும்போது, கோயம்புத்தூர் மண்டலத்தில் இரு கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று நிர்மலா மகளிர் கல்லூரி. இக்கல்லூரி தான் முதலாவதாக இளைஞர் இலக்கிய விழாவை மிகச் சிறப்பாக ஒருங் கிணைத்து நடத்துகின்றார்கள் என்று பாராட்டு தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய மாவட்ட கோவை மாவட்ட மேற்பார்வை யாளர் கணேசன் அவர்கள் தமிழக அரசு இளைஞர்களி டத்து தனித் திறன்களை வெளிக் கொணரும் வகையில் அறிவு சார் திறன்களை பெறும் வகையில் இப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.
அதில் மாணவர்கள் தங்களுடைய முழுத் திறனை வெளிக்காட்டி பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். அவ்வகையில் நான்கு நாட்கள் தொடர்ந்து மிகச் சிறப்பாக இப்போட்டிகள் அனைத்தையும் நிர்மலா கல்லூரியின்நூலக துறைத்தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர். அருட்சகோதரி. ஜாக்குலின் மேரி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட்டமைக்காக கோவை மாவட்ட நூலக மேற்பார்வையாளர் உமாதேவி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்டத்திலேயே மிகச் சிறப்பாக மாணவியர்களின் செயல் திறன்களை வெளிக் கொணரக்கூடிய முதன்மை கல்லூரியாக நிர்மலா மகளிர் கல்லூரி விளங்குகிறது என்று பாராட்டினார்கள். நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் வெவ்வேறு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளில் இருந்து அறிவுசார் ஆன்றோர்கள் நடுவர்களாக வருகை தந்து மாணவர்கள் மாணவிகளின் தனித்திறன்களை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
இவ்வாறாக பத்து போட்டிகள் மாணவிகளுக்கு நடத்தப்பட்டு அவர்களின் சிந்தனை திறனும் செயல்பாட்டு திறனும் வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் நிறைவுவிழா வில் வழங்கப்படும் என தெரிவிக் கப்பட்டது.