fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஐம்பெரும் விழா- நீதிபதிகள் விருது வழங்கினர்

அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஐம்பெரும் விழா- நீதிபதிகள் விருது வழங்கினர்

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஐம்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆர். கே. குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடலை இசைக் கலைமாமணி கே.வி. சாந்தினி, கே.சி.ஐஸ்வர்யா ஆகியோர் பாட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அகில இந்திய பொது செயலாளர் முனைவர் சுப்பிரமணியம் அற்புதமாய் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய கௌரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் மனிதநேயம் – மனித உரிமைகள் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எஸ். பாஸ்கரன் கலந்து கொண்டு மனித உரிமைகள் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் அமர்வு நீதிபதியுமான நீதிபதி பாலசந்திரன் நுகர்வோர் உரிமை என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி என். வைத்தியநாதன் கலந்து கொண்டு மனிதநேயம் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜீயாபுதின் கலந்து கொண்டு மனித உரிமைகள் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சி.பி.ஐ. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில தலைவருமான வழக்கறிஞர் சுந்தரவடிவேலு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

”அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவியும் குருதி கொடையாளருமான லதா அர்ஜுனன், அமைப்பின் கௌரவ தலைவர் டாக்டர் ஆர்.ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவியும் சமுக சேவகருமான குருதி கொடையாளருமான லதா அர்ஜுனன் அவர்களுக்கு சிறப் பான சமுக பணியை பாராட்டி குருதிகொடை ராணி விருது வழங்கப்பட்டது

சிறந்த சமூக பணிகளை செய்து வரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயத்தை நீதியரசர் எம். கற்பகவிநாயகம் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார். அமைப்பின் துணை தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் இணைந்து விருதினை பெற்றனர்

நிகழ்ச்சியினை ஆசிரியர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். நிகழ்வின் முடிவில் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். கே. குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img