மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை கூட்டம் அதன் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எஸ்.எஸ்.சரவணன் தலைமையில் காமராஜர் சாலையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
சசிகலா வுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்,பழி தேடி தருபவர்கள் அனைவரையும் உடனே கழகத்தில் இருந்து நீக்க வேண்டும்.
அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடந்த 23.5.2021 – ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கொறடாவாக எஸ்.பி.வேலுமணி மற்றும் துணை கொறாடா, செயலாளர், பொருளாளர், ஆகியோர்களை ஏகமனதாகத் தேர்வு செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு அதிமுக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமர்நாத், வட்டக் கழக செயலாளர்கள் தினகரன், மன்னாதி, கார்மேகம், நா.பாண்டி, முன்னாள் பகுதி செயலாளர்கள் வி.கே.எஸ். மாரிசாமி, மார்க்கெட் செல்லதுரை, முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி, மற்றும் ராமகிருஷ்ணன், சித்திரலிங்கம் உமாபதி, நந்தகுமார், சொக்கர், முனியாண்டி, சேகர், போஸ் பாண்டி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.