fbpx
Homeபிற செய்திகள்அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அம்மையநாயக்கனூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனைவிளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத் துவ திட்டம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், உயர்த் தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகை யில் இப்படக்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட் டவை தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

புகைப்படக் கண்காட்சியினை அம்மையநாயக்கனூர் தேர்வுநிலை பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img