fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை துவக்கிய ஆணையர்

அவினாசிலிங்கம் மனையியல் கல்வி நிறுவனத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை துவக்கிய ஆணையர்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மக ளிர் உயர்கல்வி நிறுவ னம் வளாகத்தில், நேற்று (அக்.20) “போலீஸ் அக்கா” (POLICE AKKA) திட்டம் தொடங்கப்பட்டது.

கோவை நகர காவல் துறையால் மாநிலத்திலேயே முதல் முறையாக கடந்த 18-ம் தேதி இத்திட்டம் துவங்கப்பட்டது. ஆலோசனை உதவியாளரைத் தேட முன்வரும் மாணவர்களுக்கு உதவுவதன் மூலம் சமூக ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சாதகமான சூழலை உருவாக்குவது அல்லது நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களின் நடமாட் டத்தின் பாதுகாப்பிற்காக ஏதேனும் தீங்கு, துஷ்பிரயோகம் அல்லது ஆபத்துகளைப் புகாரளிப் பதற்காக இந்த திட்டம் உதவுகிறது.

“போலீஸ் அக்கா”வின் உதவியானது நிறுவனத்தில் உள்ள மாணவர்களைச் சென்றடைவதற்கான தேவையான திறன்கள் மற்றும் தகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

“போலீஸ் அக்கா” உடனான தொடர்பு விவரங்கள் மற்றும் நிகழ்ச்சியின் திட்டமிடல் குறிப்பிடத்தக்க இடங்களில் காண்பிக்கப்படும். பரந்த அணுகல் மற்றும் மாணவர்களைச் சென்றடைவதற்காக இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

துணைவேந்தர் டாக்டர் வி.பாரதி தலைமை தாங்கி பேசும்போது, பெண்களின் பாதுகாப்பிற்காக இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். பதிவாளர் டாக்டர் எஸ். கௌசல்யா வரவேற்றார்.

காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசும்போது, இன்றைய சூழலில் சமூகத்தில் நிகழும் பல்வேறு வகையான தாக்குதல்கள், குற்றங்கள், பின்தொடர்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டி, 50% குறைக்கக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதற்கு முன்னர் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

துணை ஆணையர் ஆர்.சுகாஷினி, உதவி ஆணையர் ஹசீனா பீபி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தத் திட்டத்துக்கான காவல் கண்காணிப்பாளரும், நோடல் அதி காரியுமான மீனாம்பிகை, தலைமைக் காவலரும் வழிகாட்டியுமான தன பாக்கியத்தை (நிறுவனத்துக்கான போலீஸ் அக்கா) அறிமுகப்படுத்தினார். மகளிர் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் டி.கீதா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img