fbpx
Homeபிற செய்திகள்ஆட்டோ நூலகம் அறிமுகம் கோவை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

ஆட்டோ நூலகம் அறிமுகம் கோவை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மைத் தேடி வரும் நடமாடும் நூலகம் கோவையில் செயல்படத் துவங்கியுள்ளது.

கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட் டோவை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறாக ஆட்டோவில் பயணிப் பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுநர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோதம்பி என்ற பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

துடியலூர் பகுதியை சேர்ந்த சையது என்பவர் தனது ஆட்டோவில் புத்தகங்கள், செய்தித் தாள்களை வைத்துக் கொண்டு சவாரி எடுக்கிறார். டாக்டர் கலாம் பவுண்டேசனின் முயற்சியில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் “ஆட்டோ தம்பி” என்ற பெயரில் இந்த நடமாடும் நூலகம் செயல்படுகிறது.

தமிழ் நாவல்கள், உரைநடை புத்தகங்கள் வாராந்திர மற்றும் மாத இதழ்கள் இதில் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்காக ஆட்டோவில் இனிப்புகள், குடிநீர், சானிடைசர் மற்றும் முகக்கவசங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோவில் பயணிக் கும் வாடிக்கையாளர்கள் செல்போனையே பயன்படுத்திக் கொண் டிருப்பதாகவும், அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியைகையில் எடுத்துள்ளதாக சையது தெரிவித்தார். இந்த ஆட்டோ கோவை மாநகரின் பல்வேறு இடங் களிலும் பயணிக்கிறது.

நீங்களும் இந்த ஆட்டோவில் பயணிக்க வேண்டுமா? 9150430091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இந்த ஆட்டோவில் பயணிக்கலாம்.

இந்த ஆட்டோ நூலகத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து சிறிது தூரம் ஆட்டோவில் பயணித்து புத்தகங்களை பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img