fbpx
Homeதலையங்கம்ஆணவக் கொலை ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

ஆணவக் கொலை ஏன்? அதைத் தடுக்க முடியுமா?

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞர், கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கோகுல்ராஜின் காதலி சுவாதி கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

2018 ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியபோது 114 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் தனக்கு நியாயம் கிடைக்காது என கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

அதில் முக்கியமான சாட்சி, இளம்பெண் சுவாதி. இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் உண்மையைச்சொன்ன சுவாதி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது, வழக்கின் போக்கையே மாற்றியது.

தன் மகன் மறைவுக்கு நியாயம் கிடைக்க வேண் டும் என்றால் பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் விசாரிக்க வேண்டும் எனக் கோரி னார், கோகுல்ராஜின் தாய்.

இதையடுத்து, இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ப.பா.மோகன், ஒரு பைசா கூட வாங்காமல் இறுதி வரையில் போராடி நீதியைப் பெற்றுத் தந்துள்ளார்.

இந்த வழக்கில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மண்ணில் ஒரு பட்டியலின இளைஞனின் படுகொலைக்கு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இது சிறைத் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான போராட்டமல்ல, சமூக நீதிக்கான போராட்டம். சாதி பாகுபாடுகள் அழிந்து சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான நீதிப் போராட்டம். இந்த போராட்டத்திற்குத்தான் நீதி கிடைத்துள்ளது என வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.

ஆணவக் கொலைக் குற்றவாளிகள் என்று கண்டறிந்து தக்க தண்டனை தந்துள்ளது ஓரள வுக்குத் திருப்தி என்றாலும், இதன் அடி நீரோட்டமாக இருப்பது ‘ஜாதி’ என்பது தான் உண்மை.

ஜாதி வெறியை ஒழித்தாலொழிய இனி வருங் காலத்தில் இத்தகைய ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாது!

படிக்க வேண்டும்

spot_img