fbpx
Homeபிற செய்திகள்இசைக் கலைஞர்களுக்காக ஸ்கோடா டெக்கான் பீட்ஸ்

இசைக் கலைஞர்களுக்காக ஸ்கோடா டெக்கான் பீட்ஸ்

இந்தியாவின் பரந்து விரிந்த இசை பாரம்பரியத்தின் மீதான தனது முன்னோடித்துவத்தைத் தொடரும் வகையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, தென்னிந்தியாவின் உள்பகுதிகளில் உள்ள உள்நாட்டு இசைத் திறமைகளை வளர்ப் பதில் கவனம் செலுத்தி, ஆர்வமுள்ள இசைக் கலைஞர்களுக்காக மற்றொரு சிம்போனிக் அரங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்கோடா டெக்கான் பீட்ஸ் – கர்நாடிக் இசை மற்றும் மனதைக் கவரும் பயணத்தில் உடன் பயணிக்கத் தயாராகுங்கள்.

இந்நிகழ்வு, 14 பிப் ரவரி 2022 அன்று தொடங்கப்பட்ட லக்ஷ்யா ஈவன்ட் கேபிட்டல் மற்றும் BToS ஆர்ட்டிஸ் மேனேஜ்மெண்ட் உடன் இணைந்து PHD மீடியா மற்றும் OMG உள்ளடக்கத்தால் ஒரு சிறந்த பிராண்டட் பிரச்சாரமாக கருத்தியல், வடிவமைப்பு செய்யப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு இசையின் அழகைப் பெருக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் முன்முயற்சியாக, ராகத்தை மையமாகக் கொண்ட மெல்லிசைகளின் துடிப்புடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

4 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 16 வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களைக் கொண்ட இந்தத் தொடர் -டேலண்ட் ஹன்ட், ஆன்-ரோடு, கேரேஜ் சீரிஸ் – ஆகிய மூன்று வெவ்வேறு கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.

திறமை வேட்டையில் தென்னிந்திய இசைத் துறையின் நட்சத்திரப் பெயர்களான ஆண்ட்ரியா ஜெரேமியா (தமிழ்), கீதா மாதுரி (தெலுங்கு), சித் தாரா கிருஷ்ணகுமார் (மலையாளம்), ரகு தீட்சித் (கன்னடம்) ஆகியோர் திறமைசாலிகளுக்கு வழி காட்டுவார்கள்.

டெக்கான் பீட்ஸின் பின்னால் உள்ள யோசனை குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின், சந்தையாக்கல் தலைவர் தருண் ஜா கூறியதாவது:

டெக்கான் பீட்ஸ் என்பது தென்னிந்தியாவின் சந்தைக்கு தனித்துவமான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஸ்கோடா இந்தியாவின் நீண்ட நாள் ஆசையின் உச்சமாகும்.

வாடிக்கையாளர்களுக்கு வளமான மற்றும் தனித்து வமான அனுபவத்தை வழங்குவதில் பிராண்ட் நம்பிக்கை கொண்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img