fbpx
Homeபிற செய்திகள்இயற்கை, யோகா படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இயற்கை, யோகா படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், இயற்கை மற்றும் யோகா (Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)) என்னும் 5½ ஆண்டிற்கான இளங்கலை மருத்துவப் பட்டப்படிப் புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-2021 கல்வி ஆண்டு முதல் கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் மூலம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு 100 மாணவர்கள் பயிலும் வகையில் உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள், 3000-க்கு மேல் புத்தகங்கள் அடங்கிய நூலகம், 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை போன்ற சகல வசதிகளுடன் இக்கல்லூரி செயல்படுகிறது.

இயற்கை மற்றும் யோகா (Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)) என்னும் 5½ ஆண்டிற்கான இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பை சிறப்பாக வழங்கி வருகிறது.

இக்கல்லூரியில் அமைந் துள்ள மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல பகுதிகள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்து மருத்துவரை அணுகி மருந்து இயற்கை மற்றும் யோகா முறை சிகிச்சைகளையும் பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

இந்த அறக்கட்டளை யின் கீழ் இயங்கி வரும் கொங்கு பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டு பசுமை வளாகத்துக்கான விருதில் அகில இந்திய அளவில் முதல் இடத் தையும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுகாதாரத்திற்கான முதல் இடத்தையும் பெற்றது.

மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவில் தேர்ச்சி விகிதம் மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதில் சிறப்பிடம் பெற்று வருகிறது.

இந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியும் அகில இந்திய அளவில் ஒரு தரமான கல்லூரியாக வளர்ந்து வருகிறது.

தற்போதைய சூழலில் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் சமுதாயத்தில் அதிகளவில் காணப்படுவதாலும், அதை குணப்படுத்தும் மகத்துவம் இந்த இயற்கை மருத்துவத்திற்கு இருப்பதாலும் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக இம்மருத்துவப்படிப்பினை தேர்வுசெய்து பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் முடிவடைந்துவிட்டது.
2022-2023 கல்வி ஆண்டிற்கான அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு இந்திய மருத்துவக்கல்லூரிகள் மற்றும் லீttஜீ:ஷ்ஷ்ஷ்.tஸீலீமீணீறீtலீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ இணைய தளம் மூலமாக 19.10.2022 வரை வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவ படிப்பிற்கு மதிப்பெண் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தி கொங்கு வேளாளர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட்டின் தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசாமி, செயலர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவி சங்கர், கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாச்சலம், முதல்வர் மருத்துவர் சி. பிரதாப் சிங் ஆகியோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img