fbpx
Homeபிற செய்திகள்இளம் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு: குடும்பநலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

இளம் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு: குடும்பநலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தற்போது 30 வயதிலிருந்து 50 வயதிற்குள்ளான பெண்களும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இளம் வயது பெண்களும் மார்பக புற்றுநோய்க்கு ஆளாவது மருத் துவ பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். விஎஸ் மருத்துவமனை, எத்திராஜ் மகளிர் கல்லூரியுடன் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 800 மாணவிகள் இளம் சிவப்பு நிற குடையின் மூலம் பிங்க் ரிப்பன் வடிவிலான அணிவகுப்பை சேத்துப்பட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழக மைதானத்தில் ஏற்படுத்தி மக் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சேத்துப்பட்டில் உள்ள மைதானத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. விஎஸ் மருத்துவமனை தற்போது புதிய முயற்சியாக பிங்க் இந்தியா இயக்கம் எனும் புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

பிங்க் இந்தியா இயக்கமானது, மார்பக புற்றுநோய் குறித்த விழிப் புணர்வை பெண்களிடையே ஏற்ப டுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி தலைவர் வி.எம். முரளீதரன், விஎஸ். குழும மருத்துவமனையின் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன், விஎஸ் குழும மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எஸ். சுந்தர், விஎஸ் குழும மருத்துவமனையின் செயல் இயக்குநர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
மார்பகப் புற்று நோய் என்பது இன்று வழக்கமான அதிகம் பேரை பாதிக்கும் புற்றுநோய் வகைகளில் ஒன்றாக இந்தியாவில் பலரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

2020ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 நிமிஷத்துக்கு ஒரு பெண் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒவ்வொரு 13 நிமிஷத்திலும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் துயரமும் இந்தியாவில் நிகழ்கிறது. முன்பு மார்பக புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் வயது விகிதம் 50-லிருந்து 70 வயதாக இருந்தது.

இது தற்போது 30 வயதிலிருந்து 50 வயதிற்குள்ளான பெண்களும் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இளம் வயது பெண்களும் மார்பக புற்று நோய்க்கு ஆளாவது மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்றார்.

புதிய விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டது குறித்து விஎஸ் குழும மருத்துவமனையின் நிறுவனர் தலைவரும், இந்தியாவின் முன்னணி புற்று நோய் இயல் மருத்துவ பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசியதாவது: இந்திய பெருநகரங்களில் வாழும் பெண்களில் 25% முதல் 32% வரையிலானோர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கிராமப்புற மகளிரைப் பொறுத் தமட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக இது விளங்குகிறது. சென்னையில் மிக அதிகபட்சமான மகளிர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சம் பேரில் 42.2 பேர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாயிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மரபு ரீதியில் முன்னோர்களில் எவருக்கேனும் மார்பக புற்று இருப்பின் அவர்களின் வாரிசுகளுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாகும்.

மிக சிறிய வயதில் பூப்பெய்துதல், தாமதமான மாதவிடாய் நிறுத்தம் போன்ற காரணங்களால் பெண்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

எப்படியிருப்பினும் இந்நோய்க்கு எந்த சூழலில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்து அதற்குரிய சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இன்று உருவாகியுள்ளன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img