fbpx
Homeபிற செய்திகள்ஈரோ கால்பந்து போட்டியில் அழகான தருணங்களை உருவாக்கிய ‘விவோ’

ஈரோ கால்பந்து போட்டியில் அழகான தருணங்களை உருவாக்கிய ‘விவோ’

யுஇஎப்ஏ ஈரோ 2020 கால்பந்து போட்டி துவக்க விழா இத்தாலி தலைநகர் ரோமில் கோலாகலமாக துவங்கியது. இதற்கான ஏற்பாடுகளை யுஇஎப்ஏ உடன் இணைந்து விவோ நிறுவனம் சிறப்பாக செய்திருந்தது.

வாழ்க்கையில் அழகான தருணங்களை இன்னும் மாயாஜாலமாக்கும் விதமாக விவோ நிறுவனம் மிகச்சிறந்த 3 இசை கலைஞர்களான மார்ட்டின் கேரிக்ஸ், போனோ மற்றும் தி எட்ஜ் ஆகியோரை துவக்க விழாவில் பங்கேற்கச் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
துவக்க விழா நிகழ்ச்சியை காண ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

போட்டியை சுற்றி நடக்கும் பல்வேறு அழகான தருணங்களை நேரலையாக படம் பிடித்து தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் நேரிலேயே போட்டியை காணும் விதமாக ‘அழகான தருணங்கள்’ என்னும் பிரச்சார தளத்தை கால்பந்தாட்ட ரசிகர்களுக்காக விவோ அமைத்துக் கொடுத்துள்ளது.

இது குறித்து விவோ நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஸ்பார்க் நி கூறுகையில், துவக்க விழா நிகழ்ச்சியை யுஇஎப்ஏ உடன் இணைந்து வழங்கியதில் பெருமைப்படுகிறோம் என்றார்.

சமூகவலைதளத்தில் #vivoSuperTime என்னும் ஹேஷ் டேக்கில் வீடியோ மற்றும் படங்களை சமர்ப்பிக்கும் ரசிகர்களின் சிறந்த வீடியோ மற்றும் படங்கள் இந்த போட்டியின் நிறைவு நாளான ஜூலை 11-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் திரையிடப்படும். ரசிகர்கள் போட்டி தொடர்பான வீடியோவை செல்பி போன்றும் எடுத்து அனுப்பலாம்.

படிக்க வேண்டும்

spot_img