fbpx
Homeபிற செய்திகள்உலக வன நாள் கொண்டாட்டம்

உலக வன நாள் கொண்டாட்டம்

உலக வனவியல் தினத்தை முன்னிட்டு, பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2 தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை மாணவர்கள், பொதுமக் களுக்கும் மாணவர்களுக்கும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்நாட்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கைவிடப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரித்தனர். சுய உறுதிமொழி மற் றும் கையெழுத்து பிரச்சாரத்துடன் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடைசி நாளில், ரேஸ்கோர்ஸில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.

பிஎஸ்ஜி காஸ் (PSGCAS) நிர்வாகத்தின் அறங்காவலர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆதரவுடன், லெப்டி னன்ட் டாக்டர் டி. ஆண்டனி அருள் ராஜ் – இணை என்சிசி அதிகாரி மற்றும் சிக்யூஎம்எஸ் யோகேஷ், சிஎஸ்எம். ஜெய் கனஸ், எஸ்.ஜி.டி. ஓம் பிரகாஷ், எஸ்ஜிடி. ஹரிஹரன், எஸ்ஜிடி. தனசேகர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img