fbpx
Homeபிற செய்திகள்‘என் குப்பை- என் பொறுப்பு’ திட்டம் 22-வது வார்டில் துவக்கம்

‘என் குப்பை- என் பொறுப்பு’ திட்டம் 22-வது வார்டில் துவக்கம்

கோவை 22-வது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கோடு, தமிழக அரசின் “என் குப்பை ..! என் பொறுப்பு..!” எனும் திட்டத்தை, வார்டு பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்வின் துவக்க விழா நடைபெற்றது.

விழாவில், திராவிடன் அறக்கட்டளை தலைவரும், வார்டு உறுப்பினருமான கோவை பாபு பேசும்போது, மக்களின் நலனைக் காக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் சிறப்புகளையும், முக் கியத்துவத்தையும் எடுத் துச் சொன்னார்.

கோவை மாநகரை 100 சதவீதம் தூய்மையாகவும், பசுமை யாகவும் மாற்றும் அரசின் திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

பள்ளித் தலைமையாசி ரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

படிக்க வேண்டும்

spot_img