fbpx
Homeபிற செய்திகள்எல்சி பிசிஓஎஸ் கிளீனிக் துவக்கம்

எல்சி பிசிஓஎஸ் கிளீனிக் துவக்கம்

எண்டோஸ்கோப்பி லேபராஸ்கோப்பியில் பிரசித்தி பெற்ற கோவை எல்சி மருத்துவமனையின் மகளிர் நலனில் சிறப்புப் பிரிவாக எல்சி பிசிஓஎஸ் கிளீனிக் துவக்கப்பட்டது.

பிசிஓஎஸ் என்பது ஒரு வகை சினைப்பை நீர்க்கட்டி வியாதியாகும். இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப் பின்மையும் கொழுப்பு நிறைந்த உணவு பழக்க வழக்கங்களாலும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளா லும் பெண் இனம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இந்த பிசிஓஎஸ்.

இன்றைய உலகில் பத்தில் மூன்று பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது என் பது அதிர்ச்சி தரும் ஓர் உண்மை.

பெண்களின் குழந்தை பேறு இன்மைக் கான முதற் காரணமும் இந்த பிசிஓஎஸ் தான். இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியது என்பது ஆறுதல் தரும் செய்தி.

மாதவிடாய் கோளாறுகள், முகத்தில் அதிக முடி வளர்ச்சி, உடல் பருமன், தோலில் கருப்பு நிறமிகள் படிவு, குழந்தை பேறின்மை, ஹார்மோன்களின் சம நிலையின்மை ஆகியவை இவற்றின் அறிகுறிகள்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், கர்ப்பப் பை புற்றுநோய், உளவியல் ரீதியான பிரச்சனைகள், இந்த பிசிஓஎஸ்சின் நீண்ட கால விளைவுகளாகும். கோவிட் இந்த நோயின் பாதிப்பை பன்மடங்கு உயர்த்தி உள்ளது.

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், உணவு பழக்கவழக்க மாறு தல்கள் போன்ற காரணங் களால் இன்று இதன் எண்ணிக்கை மிக அதிக மாக உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின் இன் றியமையாமை, பிஎம்ஐ அட்டவணை, மாதவி டாய் நாட்காட்டி இவற்றின் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி, கல்லூரிகளில் கொண்டு சேர்ப்பது எல்சி மருத்துவக் குழுவின் நோக்கம். வரும் நாட்களில் பெண் மலட்டுத்தன்மை தவிர்க்க இது ஒரு பெரும் முயற்சி யாக இருக்கும்.

வயிற்று உபாதைக ளுக்கு லேப்ராஸ்கோபி மூலம் ஒரு நாள் தீர்வு கள் அளித்துவரும் எல்சி மருத்துவமனை, மகளிர் நலனில் கர்ப்பப்பை, சினைப்பை நோய்களுக்கு அதிநவீன லேப்ராஸ்கோப்பி மூலம் பல மகளிர்க்கு, அன்றாட பணிகள் பாதிக்காத வண்ணம் அறுவை சிகிச் சைக்குப் பின் துரித குணமாக்குதல் மூலம் சேவை அளித்து வருகிறது.

நிகழ்ச்சியில் எல்சி மருத்துவக்குழுவினர் டாக்டர் பி.எஸ்.ராஜன், டாக்டர் வித்யாராஜன், மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் டாக்டர் ரேவதி, சவிதா, அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் கந்தசாமி, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img