fbpx
Homeபிற செய்திகள்எஸ்பிஆர் குழுமத்துக்கு கௌரவமிக்க விருது

எஸ்பிஆர் குழுமத்துக்கு கௌரவமிக்க விருது

சென்னை மாநகரின் மிகப்பெரிய நகரிய வளாகத்தை உருவாக்கி வரும் பிரபல ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான எஸ்பிஆர் குழுமம் (SPR Group), குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாட்டு நிகழ்வில் மதிப்பும், கௌரவமிக்க விருதைப் பெற்றிருக்கிறது.

“SAFE”- தொழிலக பணியாளர்க ளுக்கான எஸ்பிஆர் குடியிருப்பு (SPR Accommodation for Factory Employees) என்ற அதன் புதிய முன்னெடுப்பு திட்டத்தின் கீழ், சென்னை மாநகரத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந் திருக்கும் பல்வேறு உற்பத்தி தொழில கங்களில் பணியாற்றும் 60,000 பணியாளர்களுக்கு குடியிருப்பு இல்லங்களைக் கட்டும் ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது மற்றும் அதனை செயல்படுத்துவது மீது எஸ்பிஆர் வலுவான பொறுப்புறுதியும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கிறது.

கட்டிட உட்கட்டமைப்பு வசதி கள், பணியாளர்களுக்கான ஒரு பிரத்யேக விடுதி மற்றும் பெண் பணியாளர்களுக்கான ஒரு விடுதி ஆகியவற்றை மிக வேகமாக உரு வாக்கிய செயல்திறனுக்காக இந்திய அரசின் அங்கீகாரத்தை SAFE செயல்திட்டம் பெற்றிருக்கிறது.

நகர்ப்புற குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு மிகப்பெரிய மற்றும் அதிவேக பங்களிப்பாளர் என்ற இந்த பெருமைமிகு விருதை, குஜராத்தின், ராஜ்கோட் நகரில் நடைபெற்ற உலகளாவிய வீட்டுவசதி மாநாடு நிகழ்வில் எஸ்பிஆர் குழு மத்திற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வழங்கினார்.

சென்னை மாநகரம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொழிலகங்கள் இயங்கி வரும் தொழிலக நகரமான ஸ்ரீபெரும்புதூரில் இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4000 பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதியை உருவாக்கும் இச்செயல் திட்டத்தின் முதல் கட்டமானது 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து செயல்பாட் டிற்கு வரும்.

இப்பகுதியில் இயங்கிவரும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடனான கூட்டுவகிப்பு நடவடிக்கையான SAFE செயல் திட்டம் எஸ்பிஆர் குழுமத்தால் திறம் பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img