fbpx
Homeபிற செய்திகள்ஐடிசியின் பெபல்லா பைனெஸ்ஸே சாக்லேட் அறிமுகம்

ஐடிசியின் பெபல்லா பைனெஸ்ஸே சாக்லேட் அறிமுகம்

ஐடிசி (ITC) லிமிடெட் நிறுவனத்தின் லக்சுரி சாக்லேட் பிராண்டான திணீதீமீறீறீமீ எக்ஸ்குவிசைட் சாக்லேட்ஸ், ஈடுஇணையற்ற சாக்லேட் அனுபவங்களை வழங்குவதில் பெயர் பெற்றது.

தற்போது இது, இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக நுண்ணிய சாக்லேட் துகள்களை கொண்ட Fabelle ஃபைனெஸ்ஸேவை அறிமுகப்படுத்துகிறது.

ஈடு இணையற்ற ஸ்மூத்னஸ் மற்றும் உருகும் அனுபவத்தை கொண்ட உலகின் மிகச்சிறந்த சாக்லேட்டை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பாட்டிசியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான செஃப் அட்ரியானோ ஜூம்போவுடன் Fabelle இணைந்துள்ளது.

சாக்லேட்டின் ஸ்மூத்னஸ் என்பது, நுகர்வோருக்கு உயர்தர அனுபவத்தை தரக்கூடிய அடிப்படையான உணர்ச்சிப்பூர்வமான பண்பாகும்.

தனது சிக்னேச்சர் குரோக்யூம்பவுச் தயாரிப்பின் மூலம் பெரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பாட்டிசியரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான செஃப் அட்ரியானோ ஜூம்போ, மும்பையில் Fabelle ஃபைனெஸ்ஸேவை அறிமுகப்படுத்த வந்திருந்தார்.

அவர் பேசுகையில்,Fabelle ஃபைனெஸ்ஸேவை விட மிக நுண்ணிய துகள்களை கொண்ட சாக்லேட்களை உருவாக்குவதற்கான, உலகெங்கிலும் உள்ள சாக்லேட் உற்பத்தியாளர்களுக்கு உலகளாவிய சவாலை விடுத்தார்.

இந்த சவாலில் வெற்றி பெறுவோருக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த சவால் 18-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

சவால் குறித்த விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை Fabelle என்கிற இந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து, அவர் Fabelleஃபைனெஸ்ஸே பயன்படுத்தி அற்புதமான சாக்லேட் படைப்புகளை வடிவமைத்தார்.

இந்தியாவில் இருந்து குளோபல் லக்சுரி சாக்லேட் மார்க்கெட்டுக்கான அளவுகோல் நிர்ணயிப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனுஜ் ருஸ்தகி – சீஃப் ஆபரேட்டிங் ஆஃபிசர் – சாக்லேட்ஸ், கன்ஃபெக்‌ஷனரி மற்றும் காபி, ஃபுட் டிவிசன், ITC-லிமிடெட், கூறுகையில், “Fabelle ஃபைனெஸ்ஸில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதுமையான சாக்லேட் ப்ராசஸிங் டெக்னாலஜியை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இது சாக்லேட் ஆர்வலர்களுக்கு ஒப்பிடமுடியாத உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கும். உலகத் தரம் வாய்ந்த இந்திய பிராண்ட்களை உருவாக்கு
வதற்காக அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான ITC–யின் அர்ப்பணிப்பை எடுத்துக்
காட்டுகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img