fbpx
Homeபிற செய்திகள்‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ்’ இயர்போன் அறிமுகம்

‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ்’ இயர்போன் அறிமுகம்

உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக ‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2’ என்னும் இயர்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது இந்தியாவில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரேடியன்ட் சில்வர் கலர் ‘ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ’ என்னும் துருப்பிடிக்காத இயர்போனையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z மற்றும் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z பாஸ் ஆகிய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2 இயர்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இதை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இசையை அதிகம் விரும்பும் பயனர்களுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேகமான சார்ஜிங்குடன் நீண்ட நேரம் வரும் பேட்டரி 10 நிமிடம் இந்த இயர்போனை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் பயன்டுத்த முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்யும்போது குறைந்தபட்சம் இதை 30 மணி நேரம் பயன்படுத்த முடியும்.

இதில் 12.4 எம்எம் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயனர்களுக்கு இது சிறந்த மற்றும் துல்லியமான இசை அனுபவத்தை வழங்கும்.

‘ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் Z2’ இயர்போன் 5 ஏப்ரல் முதல் ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர்செயலி, அமேசான்.இன், பிளிப்கார்ட்.காம், ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்கள் மற்றும் பிற மொபைல் போன் ஸ்டோர்களிடம் கிடைக்கும். அதன் விலை 1999 ரூபாய் ஆகும்.

இதற்கான முன் பதிவு ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் செயலி, ஒன்பிளஸ் பிரத்யேக ஸ்டோர்களில் துவங்கி விட்டன. ஒன்பிளஸ் தனது ‘பவர் ஆப் டென்’ என்னும் பிரச்சார திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் முதல் தற்போது வரை இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

படிக்க வேண்டும்

spot_img