கோவையை சேர்ந்த ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ என்ற தன்னார்வ அமைப்பினர் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு கிராமப் புறங்களில் வசிக்கும் கர்ப்பிணி கள் மற் றும் ஏழைகளுக்கு இலவச ஆம் புலன்ஸ் சேவையை நடத்தி வரு கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும், மருத்துவம னைகள் அதிகமாக இருப்பதால், நகரப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றிட முடிகிறது.
ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அவசர உதவிக்கு அழைக்கும் போது, உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
கொரோனாவால் மக்கள் பலரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் சூழலில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் அவர்களுக்கு தற்காலிக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் ஆம்புலன் சுகள் குறித்த நேரத்திற்கு ஊரக பகுதிகளுக்குச் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ என்ற தன்னார்வ அமைப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், மாற்றுத்திற னாளி கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜான் சாமுவேல் கூறிய தாவது:
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான், பலரது உதவியால் படித்து முடித்தேன். எனக்கு சிலர் உதவியதை போல நானும் பலருக்கு உதவ நினைத்துக் கடந்த 2012ம் ஆண்டு, ‘ஃபீட் தி சிட்டி மெசின்’ அமைப்பைத் தொடங்கினேன். இந்த அமைப் பில் 160 தன்னார்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.அதன் மூலமாக, படிக்காத குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் கல்வியின் முக்கி யத்துவத்தை உணர்த்தி, குழந் தைகளை பள்ளிக்கு அனுப்பும் பணியைத் துவங்கினோம். அதோடு, மலைக்கிராம மக்களிடையே சானிடைசர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, ஏழைகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தோம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 1600 பேருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளோம். இந்த நிலையில் தான் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப் பட்டனர். அதோடு, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கான கட்டணமும் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
அப்போது நண்பர்களின் கார்களை வாங்கி அதனை ஆம்பு லன்ஸாக மாற்றி, அதில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாடகைக்கு வாங்கி பொருத்தி யுள்ளோம். நகரப்பகுதி மக்களை விட கிராமப் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண் களுக்கு ஆம் புலன்ஸ் விரைவாக கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஊரக பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு உதவத் தொடங்கினோம். அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழைகளுக்கும் உதவினோம் . இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 1800 பேரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்று, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறோம். தற்போது 4 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 30 டிரைவர்கள் பணி யில் உள்ளனர். ஒவ்வொரு டிரைவருக்க்கும் தலா 3 நாள் வேலை, அடுத்த 3 நாள் ஓய்வு கொடுக்கப்படுகிறது. மேலும், தற்போது 30 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர். தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டுள்ளன.
எனவே கார்க ளுக்கு பதிலாக ஆம்புலன்ஸ் ஒன்றையே வாங்கத் திட்டமிட்டு வருகிறோம். தொடர்ந்து எங்கள் பணிகளை செய்வோம். ஏழை கள் மற்றும் கர்ப்பிணிகள் மட்டும் ஆம்புலன்ஸ் சேவையை பெற 9952329813 தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு ஜான் சாமுவேல் கூறினார்.