fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் 5ஜி கருத்தரங்கு

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் 5ஜி கருத்தரங்கு

கோவை அருகே கே.ஐ.டி -கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பு-பொறியியல் 5ஜி மற்றும் மின்சார வாக னங்கள் மற்றும் ட்ரோன்கள்-பொறியியல் 5ஜி என்னும் தலைப்பில் கல்லூரியின் கலையரங்கத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திரு.டி.வினய் (Academic Program Manager-CADFEM INDIA (ELITE CHANNEL PARTNER OF ANSYS) கல்வித் திட்ட மேலாளர், CADFEM இந்தியா (ANSYS இன் எலைட் சேனல் பார்ட்னர்) கலந்து கொண்டார். அவர் பேசுகையில் எலெக்ட்ரிக் வாகனம், ட்ரோன்ஸ்- பொறியியல் 5ஜி தொழில் நுட்பம் மற்றும் அதன் உற்பத்தி, பயன்பாடுகள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு அமைப்பு- பொறியியல் 5ஜி தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். இன்றைய சூழலில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வானூர்தி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகளில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கி கூறினார்.

மாணவ, மாணவிகள் 5ஜி தொழில்நுட்ப நோக்கங் களை அறிந்து கொண்டு, அதில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் இவ்விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் முனைவர் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் முனைவர் எம்.ரமேஷ் ,டீன்-கல்வி மற்றும் ஆராய்ச்சி முனைவர் கே.ராமசாமி, டீன்- மாணவர் அமைப்பு முனைவர் எஸ்.சுரேஷ், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.மைதிலி, கணினி பொறியியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.ராஜா முகமது, இயந்திர பொறியியல் துறைத்தலைவர் முனைவர் ஜெ.மணிராஜ், வானூர்தி பொறியியல் துறைத்தலைவர் ஏ.ஆர்.சரவணன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர்ஆர்.லால்ராஜாசிங், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறையின் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.தமிழ்செல்வன் மற்றும் பேராசிரியர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img