fbpx
Homeபிற செய்திகள்கல்வி நிறுவனங்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு

கல்வி நிறுவனங்களின் மேம்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு

கல்வி நிறுவனங்களின் மேம்பட்ட வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க 20-க்கும் மேற்பட்ட முன்னணி இந்திய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கோவா பிர கடனம்’ உடன்படிக்கை செய்து கையெழுத்திட்டன.

உறுதிமொழி, சட்டம், மாற்றம், உருமாற்றம் (PACT2030) ஆகியவற்றை வலியுறுத்தி கோவாவில் மூன்று நாள் மாநாடு அண் மையில் நடந்தது. இதில் பங்கேற்க கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சாஷி ஆனந்த் சிறப்பு ரையாற்றினார்.

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும் நோக்கில் கல் வியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த “கோவா பிரகடனம்“ உடன்படிக்கையானது.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) தலைவர் டாக்டர் பூஷன் பட்வர்தன், பா. ஜ.க.வின் துணைத் தலை வரும் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவருமான ஸ்ரீ அவினாஷ் ராய் கண்ணா, ஹிமாலயன் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு (ஹெஸ்கோ) நிறுவனர் டாக்டர் அனில் பிரகாஷ் ஜோஷி, இந்திய அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஷௌர்யா தோவல், ஆஸ்திரேலியா கான்பெர்ரா பல்கலைக் கழக முன்னாள் சார்பு பேராசிரியர் லாரன்ஸ் பிராட்செட் ஆகியோர் முன்னிலையில் கோவா பிரகடனம் கையெழுத்தா னது. தரமான கல்விக்கு மனவலிமை, அறிவு, செயல், குணம் ஆகியன முக்கி யமானவை. விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்த கல்வி மட்டுமே சாத்தியம் என்று நாக் கமிட்டி தலை வர் டாக்டர் பூஷன் பட்வர்த்தன் பேசினார்.

தலைமை, ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் கற்றல், வளாக செயல்பாடுகள், சேவையின் தரம் ஆகிய வற்றை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் செய்ய வேண் டிய மிக முக்கியமான அம்சங்களாகும் என்று இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் துணைத் தலைவரும் பாதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவருமான ஸ்ரீ அவினாஷ் ராய் கண்ணா வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img