fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பட்டினத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களால் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

காவேரிப்பட்டினத்தில் கள்ளச்சாராயம், போதை பொருட்களால் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் துணைக் கிளை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை இணைந்து காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு ரெட்கிராஸ் செயலாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க துறை காவல் ஆய்வாளர் கமலேசன், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உதவி இயக்குனர் பாலகுரு, காவேரிப்பட்டினம் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார், ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மாரியப்பன், கிருஷ்ணகிரி கம்பன் கழக நிர்வாகி ரவீந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பேரணியை நிரந்தர மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் வேல்முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி சேலம் மெயின் ரோடு விநாயகர் கோயில் வழியாக பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

படிக்க வேண்டும்

spot_img