fbpx
Homeபிற செய்திகள்கிணத்துக்கடவு ‘சரணாலயம்’ காப்பகத்தில் உள்ள 15 குழந்தைகளை விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற தன்னார்வலர்கள்

கிணத்துக்கடவு ‘சரணாலயம்’ காப்பகத்தில் உள்ள 15 குழந்தைகளை விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற தன்னார்வலர்கள்

கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் இந்தியா, மார்ட் 100, அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள், 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வருகின்ற, சரணாலயம் என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக குழந்தைகளிடம் அவர்களின் ஆசைகளை கேட்டறிந்த பொழுது பல்வேறு குழந்தைகள் வானில் பறக்க வேண்டும், விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று அந்த குழந்தைகளை விமானத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக இது குறித்து, கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் தலைவர் தீபேந்தர் சிங் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காப்பகத்தில், உள்ள அனைத்து குழந்தைகளும், தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

குழந்தைகளுக்கு அளிக்கும், “எந்தவொரு கருணைச் செயலும் வீணாகாது, அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.” என்ற முனைப்புடன், கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, மற்றும் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 மற்றும் மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகியோரின், கூட்டு முயற்சியாக “ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி” என்ற இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.

உறவுகளால், கைவிடப்பட்ட 15 குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும், வகையில், கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்கிறோம்.

சென்னையில் உள்ள ஒரு தனியார், விளையாட்டு அரங்கில் குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். மீண்டும் இன்று இரவு விமானம் மூலமாகவே கோவை திரும்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பின் தலைவர் ராஜேஷ் போஹரா, கோவை ரவுண்ட் டேபிள் அமைப்பின் செயலாளர் ராகுல் கிருஷ்ண கோபால், கோவை லேடிஸ் சர்க்கிள் தலைவி ஸ்ரீ தேவி, வட்டார தலைவர் விஷ்ணு பிரபாகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img