fbpx
Homeபிற செய்திகள்குறைகளை தீர்க்க எப்போதும் தயாராக இருக்கிறோம்; மக்கள் நலன்தான் முக்கியம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்...

குறைகளை தீர்க்க எப்போதும் தயாராக இருக்கிறோம்; மக்கள் நலன்தான் முக்கியம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தமிழகத்தில் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற அடிப்படையில் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை போல, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, பூங்கா, மற்றும் பொது இடங்கள் என 300 இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த வகையில், மேயரின் பகுதிக்குட்பட்ட மாநகராட்சி 20-வது வார்டு போல்பேட்டையிலுள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி கிராமசபை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் நகராட்சி, மாநகராட்சி பகுதியிலும் மக்களின் கருத்தை கேட்டு குறைகளை களைய வேண்டும், பகுதி வளர்ச்சிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

நீங்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை எந்த பணிகளை முதலில் செய்வது மற்ற பணிகளை அடுத்த கட்டமாக செய்வது என்று முறைப்படுத்தி செய்வதற்குத்தான் இந்த கூட்டம்.
பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதை குறிப்பெடுத்து கொண்டு முழு மையாக அப்பணியை செய்து கொடுப்போம்.

பலருக்கு இடம் இருந்தும் குடியிருப்பு வசதியில் லாமல் இருந்தால், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டுவதற்கு வழி வகை செய்யப்படும். இடம் இல்லாதவர்கள் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

மாநகர பகுதியில் சுயஉதவி குழுக்களுக்கு மானியம் மற்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க இந்த பகுதி சபா கூட்டம் மூலம் வழிவகை செய்யப்படும்.

உங்கள் குறைகளை தீர்க்க எப்போதும் தயாராக இருக்கிறோம். இந்த அரசுக்கு மக்கள நலன்தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசி னார்.
மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வித பாகுபாடும் இல்லாமல், 60 வார்டுகளிலும் நிறைவேற்றப்படும். மாநகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

புதிய கால்வாய் கட்டுதல் சாலை வசதி தொடங்கப்பட்டு உள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பை போன்றவற்றை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண் டும். தமிழக அரசு உத்தரவு படி மீண்டும் மஞ்சள்பை திட்டம் தொடங்கப்பட்டு, பொது மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 1.50 லட்சம் மஞ்சள் பை வழங்கியுள்ளோம்.

24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நமக்காக உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி, உங்களுக் காக பணியாற்றுகிறோம். எந்த குறைகளாக இருந்தாலும்எப்போதும் என்னை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி மாநகரம் தொழில் சார்ந்த நகர மாக இருப்பதால், தன்னார்வலர் கள் உள்ளிட்டவர்கள் தொழில் சார்ந்த எதுவாக இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம்.
உதவிகள் செய்ய வேண் டும் என்றாலும் அணுகலாம். எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பதற்கு நான் கடமை பட்டவனாக இருக்கிறேன்.

தற்போது தமிழக அரசுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதை போல், தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். சிறந்த மாநகராட்சியாக உருவாக்குவதற்கு என்று என்னை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்து, மேயராக அமர வைத்த பகுதி மக்களுக்கு நன்றியை தெரி வித்து கொள்கிறேன். இவ்வாறு உருக்கமாக ஜெகன் பெரியசாமி பேசினார்.

இதில் பகுதி சபா குழு உறுப்பி னர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், தங்கம்மாள், ஐசக், அருணகிரி, கணேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ராமர், சரவணன், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், போல்பேட்டை பகுதி துணைச் செயலாளர் ரேவதி, போல்பேட்டை இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் கிங்ஸ்டன், முத்துச்செல்வம், அங்கன்வாடி பணியாளர் சுசீலா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img