fbpx
Homeபிற செய்திகள்‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்

‘கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா’ அறிமுகம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) ஹேட்ச்பேக் பிரிவில் அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் ‘கூல் நியூ கிளான்ஸா’ விற்பனைக்கு வந் துள்ளது.

இந்தியாவில் டொயோட்டாவின் மிக மிதமான விலை நிர்ணயம் கொண்ட கூல் நியூ டொயோட்டா கிளான்ஸா, கூடுதல் வசதியுள்ள வேரியண்ட்கள், நவீன அம்சங்கள், டைனமிக் தோற்றம், ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் குறைவான பராமரிப்பு செலவு போன்ற அம்சங்களின் மூலம் மிகச் சிறந்த விருப் பத் தேர்வாக வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்க தயாராக உள்ளது.

இந்த ஹேட்ச்பேக், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான செயலாக்கத் துணைத்தலைவர் தடாஷி அஸாஜுமா, விற்பனை மற்றும் சந்தை யாக்கல் செயல் உத்திக்கான இணை துணைத் தலைவர் அதுல்சூட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிகேஎம்-ன் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளுக்கான செயலாக்க துணைத்தலைவர் தடாஷி அசாசுமா, டொயோட்டாவின் கூல் நியூ கிளான்ஸா அறிமுகம் பற்றி கூறியதாவது:

டொயோட்டாவின் வடிவமைப் பாளர்களால் பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்டிருக்கும் கூல் நியூ கிளான்ஸா, டொயோட்டாவின் தனித் துவமான ஸ்டைலிங், ஸ்போர்ட்டியான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஒரு ஸ்மார்ட்ஃபோன் அல்லது ஸ்மார்ட் வாட்ச் வழியாக இயக்கக் கூடிய டொயோட்டா வீ-கனெக்ட் என்ற டொயோட்டாவின் சொந்த தொழில் நுட்பமானது புதிய கிளான்ஸாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நவீன இணைக்கப்பட்ட தொழில் நுட்பமானது, 45-க்கும் அதிகமான அம் சங்களைக் கொண்டி ருக்கிறது என்றார்.

டிகேஎம்-ன் விற்பனை மற்றும் சந்தை செயல் உத்திக்கான ஏவிபி, அதுல்சூட், பேசுகையில், “மதிப்பு மற்றும் ஸ்டைலை எதிர்பார்க்கிற இளம் தலைமுறையினரின் தேவைகளை இதன் மூலம் பூர்த்தி செய்ய விளைகிறோம்.
கூல் நியூ கிளான்ஸாவின் அறிமுகம் இந்த இலக்கை நோக்கிய முக்கிய நடவடிக்கை.

அதிக பயிற்சி பெற்ற பணியாளர்கள் உடனடியாகவும், உரிய நேரத்திலும் உங்களது காரை அதிக அக்கறையோடு கவனித்து சர்வீஸ் மற்றும் பராமரிப்பை வழங்குகின்றனர்,” என்றார். வெறும் ரூ.11,000 என்றதொகையை செலுத்துவதன்மூலம்டொயோட்டா கூல் நியூ கிளான்ஸா விற்கான முன்பதிவுகள் கடந்த 9-ம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளன.

ஆன்லைனில் முன்பதிவுகளை செய்யலாம். விவரங்களைப் பெற www.toyotabharat.com http://www.toyotabharat.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

படிக்க வேண்டும்

spot_img