fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா

கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு தின விழா

கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர் மு. அகிலா வரவேற்றார்.

கே.பி.ஆர். குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கி பேசியதாவது:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்காக அனைத்து வசதிகளும் முன்னணி மென்பொருள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடம் 450-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளோம்.

இது இறுதியாண்டு மாணவர்கள் உடைய எண்ணிக்கையில் 93 சதவீதம்.
மீதமுள்ள 7 சதவீதம் மாணவர்களுக்கு வருகிற இரண்டு மாதத்தில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், எபிசோட், ஜோகோ போன்ற முன்னணி பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளார்கள் என்றார்.

சிறப்பு விருந்தினர் இன்போசிஸ் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவர் கௌதம் பிரேம்குமார் பேசியதாவது:

மாணவர்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கை பயணத்தை தொடங்குவதன் முதல்படி முதல் வேலை. மாணவர்களுடைய தன்னம்பிக்கையும், மிக விரைவாக முன்னேறுவதற்கு தேவையான மன உறுதியும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஏற்பாடுகளை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் முனைவர் தாமரைக்கண்ணன், அந்தத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்போது, கே.பி.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதலே வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மிக நல்ல பன்னாட்டு நிறுவனங்களுக்கான பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகின்றன.

ஒரு பத்து சதவீத மாணவர்கள் மூன்று, நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img