fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த 3778 மனுக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கல்- கோவை ஆட்சியர் சமீரன் தகவல்

கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த 3778 மனுக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கல்- கோவை ஆட்சியர் சமீரன் தகவல்

கோவிட் -19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in http://www.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலிக் கப்பட்டு, நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரு கிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பத £வது: கோவை மாவட்டத்தில் நாளது வரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு 3,778 இனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1,187 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் இதர காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவிக்கப்பட்ட தகவல்: 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட்-19 இறப்புகளுக்கு நிவா ரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் (18.05.2022) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

20.03.2022 முதல் ஏற்படும் கோவிட் -19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக் கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண் டும்.

மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் (டிஆர்ஓ) முறையீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

எனவே, கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்த வர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img