fbpx
Homeபிற செய்திகள்கோவை இனி முதல்வர் ஸ்டாலினின் கோட்டைதான் - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை இனி முதல்வர் ஸ்டாலினின் கோட்டைதான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும் என்றும் கோவை இனி முதல்வர் ஸ்டாலினின் கோட்டை தான் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: அதிமுகவின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை இனி கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை தான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவிலை. நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலமாக நன்றி சொல்வோம்.

கோவை மாநகராட்சி அல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகள் பகுதிகள் முழுவதுமே கடந்த ஆட்சியில் செய்த தவறுகள், குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு, வரக்கூடிய காலங்களில் மக்களுக்கு ஒரு தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு.

வெளிப்படை தன்மையுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினின் 9 மாத கால ஆட்சியின் சாதனையால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img