fbpx
Homeபிற செய்திகள்கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு ‘நீர் நிலைத்தன்மை’ விருது

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளுக்கு ‘நீர் நிலைத்தன்மை’ விருது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தை சார்ந்த கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகளான முனைவர் கு.ஹரி, முனைவர் து.புத்திர பிரதாப், முனைவர் ப.முரளி, முனைவர் பா.சிங்காரவேலு, முனைவர் அ.ரமேஷ்சுந்தர், முனைவர் பக்ஷி ராம் ஆகியோருக்கு 2021-ம் ஆண் டிற்கான ‘நீர் நிலைத்தன்மை’ விருது வழங்கப்பட்டது.

ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI), சர்வதேச நீர் சங்கம் (IWA) மற்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (UNDP) ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின், ‘நிலையான வளர்ச்சி இலக்குகளை’ அடையும் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ‘நீர் நிலைத்தன்மை விரு துகளை’, இந்த ஆண்டு முதல் வழங்குகின்றன.

இதில் ‘விவசாயத் துறையில் நீர் பயன்பாட்டுத் திறன்’ என்ற பிரிவில் கோவையை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு, மண் ஈரப்பதங் காட்டி (Soil moisture indicator)என்னும் கருவியினை உருவாக்கி நீர் வளங்களை சேமித்த ஆராயச்சிக்காக, முதலிடம் கிடைத்தது.

புது தில்லியில் உலக நீர் தினத்தன்று (மார்ச் 22) நடை பெற்ற விழாவில், இவ்விருது வழங்கப்பட்டது. மண் ஈரப்பதங் காட்டி கருவியினைப் பயன்படுத்தி கரும்பு விவசாயிகள் ஏறத்தாழ 15 விழுக்காடு வரை தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

விருது பெற்ற விஞ்ஞானிகளை பாராட்டிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஜி‌ ஹேமப்ரபா, ‘உழவர் பங்கேற்பு தொழில்நுட்ப உருவாக்கம்’ என்ற ஆராய்ச்சி முறையின் அடிப்படையில் உரு வாக்கப்பட்ட இக்கருவியானது தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், ஈரோடு, மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் வயல்களில் பரி சோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்பட்டது.

இது குறித்த கூடுதல் விவரங்களை லீttஜீ://suரீணீக்ஷீநீணீஸீமீ.வீநீணீக்ஷீ.ரீஷீஸ்.வீஸீ மற்றும் http://caneinfo.icar.gov.in என்ற இணைய தளங்களில் காணலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img