fbpx
Homeபிற செய்திகள்கோவை: குளத்தின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: குளத்தின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கிருஷ்ணம்பதி ஏரி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் குளத்தின் புனரமைப்புப் பணிகளான மிதிவண்டி பாதை, அழகு புல்வெளி அமைத்தல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் மற்றும் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தி பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

உடன் மாநகரப் பொறியாளர் அரசு, உதவி செயற்பொறியாளர் உமாதேவி, உதவி பொறியாளர் பார்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img