fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் 47567 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 47567 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி

கோவையில் 47567 பேருக்கு ரூ. 199.52 கோடியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மற்றும் பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் மொத்த எடை 5 பவுனுக்குட்பட்டு கடன் பெற்று அரசாணைக்குட்பட்டு அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 47567 பயனாளிகளுக்கு ரூ.199.52 கோடி மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நகைக்கடன் பெற்ற கூட்டுறவு வங்கி கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கியை அனுகி கடன் தள்ளுபடி சான்றிதழினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img