fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் நாளை தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் நாளை தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் நாளை 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடை பெற இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:
இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 10,05,843 – ஒன்று முதல் 19 வயதுடைய குழந் தைகள், 2,59,322 – இருபது வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) பயனடைய உள்ள னர்.

இச்சிறப்பு முகாம் குறித்து மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 2-ம் தேதி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

பொதுசுகாதாரம் மற் றும் நோய் தடுப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பள்ளி மற்றும் கல்விதுறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச் சித் துறை, கோவை மருத்துவ கல்லூரி முதல் வர் மற்றும் இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோர் கலந்து கொண்டனர்.

துணை இயக்குனர் சுகாதார பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை மரு.பு.அருணா, இச்சிறப்பு முகாமின் நோக்கத்தையும் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

முகாம் நடைபெறும் இடங்கள்
இச்சிறப்பு முகாம் நாளை 9-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்கள், 572- தனியார் பள்ளிகள் 1392-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 132 -கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள், 89 -அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 328-துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்படும்.

விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 16-ம் தேதி வழங்கப்படுகிறது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறையிலிருந்து வட்டார மருத்துவர்கள் மற்றும் சுகாதார மேற்பார் வையாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் உள்ள வட்டார திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமின் மூலம், தங்கள் குழந்தைகளை பயன் பெறச் செய்து, சிறந்த கல்வித்திறனுடன் கூடிய ஆரோக்கியமான குடற்புழு தொற்றில்லா சமுதாயத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img