fbpx
Homeபிற செய்திகள்கோவை வி.ஜி.மருத்துவமனையில் இன்றுமுதல் 12ம் தேதி வரை மகளிருக்கான மருத்துவமுகாம்

கோவை வி.ஜி.மருத்துவமனையில் இன்றுமுதல் 12ம் தேதி வரை மகளிருக்கான மருத்துவமுகாம்

துடியலூரிலுள்ள வி.ஜி.மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் நல்வாழ்வு வார மருத்து வமுகாம் நடக்க உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையில் துணைத் தலைவர் நந்தினி வெங்கடேஷ் செய்தியார் களிடம் கூறியதாவது. இளமைப் பருவம் முதல் முதுமை வரை பெண் கள் உடல்ரீதியாக பல் வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

போதிய விழிப்புணர்வு இன்மையாலும், அலட் சியத்தினாலும் அவர்கள் போதிய மருத்துவசிகிச்சை எடுப்பதில்லை.

இதனால் நோய்முற்றியநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் அதிக பொருளா தார இழப்பு, தீவிர சிகிச்சை உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்க பெண்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச்.7 முதல் 12 ஆம் தேதி வரை மருத்துவமனையில் பெண்கள் நல் வாழ்வு வாரத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதில் மார்பகம் சம்பந்தப்பட்ட கட்டிகள், தைராய்டு, சினைப்பை கட்டிகள். குழந்தையின்மை, கர்ப்பம்,க ர்ப்பை கட்டிகள், அதிக ரத்தப் போக்கு,மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் பிரச்னைகள்,கருப்பை புற்றுநோய், குடலிறக்கம், ஒட்டுக்குடல், பித்தப்பை கற்கள், நாள்பட்ட வயிற்றுவலி,மூலநோய் உள்ளிட்ட அனைத்து பிரச் னைகளுக்கும் டாக்டர்கள் நந்தினி, ரம்யா ஜெயராமன், விஷ்ணுகுமார், எம்.சியாமளா மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் தகுந்த ஆலோசனைக ளையும், சிகிச்சைகளையும் அளிப்பர். வயிறு, மார் பக ஸ்கேன் ஆகியன இல வசமாக செய்யப்ப டுகிறது.

அத்தியாவசியமான முக்கிய பரிசோதனைகள் மிகக்குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அ¬ னத்து மருத்துவக் காப் பீட்டுத் திட்டங்களும் நடைமுறையிலுள்ளன.

இதனை பெண்கள் அனை வரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img