fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: போலீஸ், மாநகராட்சி கமிஷனர்கள் பங்கேற்பு

கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: போலீஸ், மாநகராட்சி கமிஷனர்கள் பங்கேற்பு

கோவையில் கே.எம்.சி.எச். மருத்துவ மனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வ.உ.சி. பூங்கா அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கொடி அசைத்தும், பலூன்கள் பறக்கவிட்டும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.எச்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச் சாமி தலைமை தாங்கினார்.

இந்த பேரணி வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கி டாக்டர் நஞ்சப்பா ரோடு, தமிழ்நாடு ஓட்டல் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை சென்றடைந்தது.
இந்த பேரணியில் டாக்டர்கள், செவிலி யர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட வர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் அருண் நல்ல பழனிசாமி கூறும்போது, “ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் நோயில் இருந்து முற்றிலும் விடுபடலாம் என்பதை பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது.

மேலும் கோவை கே.எம்.சி. எச்.மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் மிக திறமைவாய்ந்த டாக்டர் களுடன் செயல்பட்டு வருகிறது, என்றார். 

படிக்க வேண்டும்

spot_img