fbpx
Homeபிற செய்திகள்கோவையில் செம்மொழிப் பூங்கா: மேயரிடம் ஸ்டான்லி பீட்டர் வலியுறுத்தல்

கோவையில் செம்மொழிப் பூங்கா: மேயரிடம் ஸ்டான்லி பீட்டர் வலியுறுத்தல்

கோவையில் செம் மொழி பூங்கா திறக்க வலியுறுத்தி, தமிழகத்தின் முன்னோடியான கிறிஸ்துவ தலைவர்களில் ஒருவரான முனைவர் டி.ஸ்டான்லி பீட்டர், மேயர் கல்பனாவிடம் கோ ரிக்கை மனு அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களுக்காக நகரில் சிறைச் சாலைப் பகுதியில் செம்மொழிப் பூங்கா திறக்கப்பட வேண்டும்.

கோவை – வாலாங்குளம் பகுதியில் அமைந்துள்ள புதிய தார் சாலைக்கு வஉசி சாலை என்று பெயர் சூட்ட வேண்டும். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டித் திட் டங்களில் படித்த வேலையற்ற இளைஞர்கள், மகளிர்களுக்கு, சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அளிக்க வேண் டும்.

மாநகராட்சி கிறிஸ்துவ சமூக பொது மயானங்களில் தண்ணீர், மின்விளக்கு, சாலை வசதி, சுற்றுச்சுவர் அ¬ மப்பதுடன் கூடுதலான இடவசதி செய்திட வேண்டும் என தெரிவித் திருந்தார்.

இத்தகவலை அமைதி நிறுவன துணைத் தலை வர் டெய்சி பிரேம லதா தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img