fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஹோலி பண்டிகை: வடமாநில மக்கள் கொண்டாட்டம்

கோவையில் ஹோலி பண்டிகை: வடமாநில மக்கள் கொண்டாட்டம்

கோவையில் வடமாநிலத்தவர்கள் உற்சாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வடமாநிலத்தவர்கள் இதனை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஹோலி பண்டிகை வண்ணங்களின் விழா என்றும் அன்று மக்கள் ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளையும் வண்ணங்கள் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்வர்.

கோவையை பொறுத்தவரை ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட், சுக்ரவார்பேட்டை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கி ஹோலி வாழ்த்துகளை கூறினர். இதில் கோவையில் உள்ள தமிழ் மக்க்ளும் கலந்து கொண்டு வண்ணப்பொடிகளை வீசி ஹோலியை கொண்டாடினர்.

படிக்க வேண்டும்

spot_img