fbpx
Homeபிற செய்திகள்சங்கரா கண் அறக்கட்டளைக்கு ‘விருது’

சங்கரா கண் அறக்கட்டளைக்கு ‘விருது’

சங்கரா கண் அறக் கட்டளைக்கு பெருமைமிகு ‘குவாலிடி சாம்பியன் விருது’ வழங்கி கவுரவித் துள்ளது கியூசிஐ.

சங்கரா கண் அறக் கட்டளை இந்தியா, தரமான கண் மருத்துவ சேவையை சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கி வருகிறது. இத்தகைய சேவையை கவுரவிக்கும் விதமாக பெருமைமிகு தரமான சேவைக்காக குவாலிடி சாம்பியன் பிளாட்டினம் விருதை இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான கியூசிஐ வழங் கியுள்ளது.

கியூசிஐ தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, நடைபெற்ற விழாவில் கியூசிஐ தலைவர் அதில் ஜைனுபாய், சங்கரா அறக்கட்டளை நிறுவனம் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.வி. ரமணியிடம் வழங்கினார்.

விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்று சிறப்பித்தார். இவ்விருதைப் பெற்றுக் கொண்ட சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங் காவலர் டாக்டர் ஆர்.வி. ரமணி கூறியதாவது:

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அதாவது, சமூகத்தில் எத்தகைய பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் அறக்கட்டளை உறுதியாக உள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தரமான சேவையை விட்டுக் கொடுப்பதை அறக்கட் டளை ஒருபோதும் ஏற்பதில்லை. தரத்தை உறுதி செய்யும் கியூசிஐ அமைப்பின் மூலமாக தரமான சேவை வழங்கும் நிறுவனத்துக்கான விருதைப் பெறுவது பெரு மையாக உள்ளது என்றார்.

அறக்கட்டளையானது 80:20 என்ற விகிதத்தில் அதாவது 80% பயனாளிகள் கிராமப்புற ஏழை மக்களாக இருப்பதால் அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எஞ்சிய 20% மக்கள் அவர்கள் பெறும் மருத்துவ சேவைக்கு போதிய கட்டணம் செலுத்தும் நிதி வசதி படைத்தவர்களாக உள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்படும் கட் டணம் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுகள் ஈடுகட்டப்படுவதால் இந்த அறக்கட்டளையானது சுயாதீனமாக செயல்பட முடிகிறது.

அறக்கட்டளை உருவாக்கியுள்ள ‘கிஃப்ட் ஆப் விஷன்’ எனும் சீரிய முயற்சி மூலம் சங்கரா கண் அறக்கட்டளை இதுவரை 23 லட்சம் பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது.

அத்துடன் இதுவரை 57 லட்சம் பேரது பார்வைத்திறன் சோதிக்கப்பட்டு அவர்களது பார்வைத்திறன் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img