fbpx
Homeபிற செய்திகள்சசிகலாவை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்

சசிகலாவை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்

அதிமுகவை திட்டமிட்டு உடைக்க சதி செய்யும் சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.


திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சங்கரநா ராயணன் தலைமை வகித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் அதிமுக வை திட்டமிட்டு உடைக்க சதி செய்யும் சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என் பது உள்பட 10 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. கட்சித் தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக கட்சி பணியாற்றி வரும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை வன்மையாக கண்டிக்கி றோம். அவருடன் பேசும் அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏனென்றால் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் இது. துரோகிகளுக்கு கட்சியில் என்றுமே இடமில்லை.


இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர். வி.பி.பி.பரமசிவம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ் மோகன், மாவட்ட அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன்,மாவட்ட துணை செயலாளர் பிரேம்குமார், மாவட்ட இணை செயலாளர் நாகரா ணி, மாவட்ட பொருளாளர் பழனிவேல் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img