fbpx
Homeபிற செய்திகள்சாதனை பெண்களை பாராட்டி கவுரவிக்கும் ‘மங்கையர் திருவிழா’ ஈரோட்டில் நடந்தது

சாதனை பெண்களை பாராட்டி கவுரவிக்கும் ‘மங்கையர் திருவிழா’ ஈரோட்டில் நடந்தது

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் சாதனை படைத்து வரும் பெண் களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக ‘மங்கையர் திருவிழா 2022’ என்னும் நிகழ்ச்சியை துவக்கி உள்ளது.

இதன் முதல் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 1000 பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்களின் சாத னைகளை பாராட்டி விருது கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொ குப்பாளர்கள் பப்பு மற்றும் தர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் நக்ஷத்ரா, ஷ்யாம், நகைச்சுவை நடி கர் நாஞ்சில் விஜயன், பவித்ரா கவுடா, அமல்ஜித் மற்றும் சமீர் ஆகியோர் கலந்து கொண்டு பார் வையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதில் பார்வையாளர்க ளுக்காக பல்வேறு போட் டிகள், பாடல்கள், மிமிக்ரி, அதிர்ஷ்ட குலுக்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

இதில் இடம் பெற்ற அனைத்து போட்டிகளும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவே இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பல்வேறு பெண்கள் கோல்டன் ‘பெட்டல் கிளப்’பில் சேர விண்ணப்பித்தனர், இது இந்த தொலைக்காட்சியை தொடர்பு கொள்ளவும், தங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கவும், சிறப்பு சலு கைகளை பெறவும் இந்த தொலைக்காட்சி துவக்கி உள்ள பிரத்யேக கிளப் ஆகும்.

மேலும் சமூகத்திற்காக பெண்கள் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுகுறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவுத் தலைவர் எஸ்.ராஜாராமன் கூறு கையில், மங்கையர் திரு விழா 2022 மாபெரும் வெற்றியடைந்தது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச் சியாக இருக்கிறது.

ஈரோட் டில் துவங்கி உள்ள இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் முடிந்து போகப் போவதில்லை. இது மேலும் தொடரும்.

தமிழகம் முழுவதும் உள்ள சாதனை பெண்களை வெளி உலகிற்கு கொண்டு வரும் வகையில் கோவை, திருப்பூர், மதுரை, திரு நெல்வேலி மற்றும் தூத் துக்குடியிலும் மங்கையர் திருவிழா நடைபெற உள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் பெண்மையின் உணர்வை போற்றி அவர் களின் சாதனைகளை பாராட்டுவதை எங்கள் தொலைக்காட்சி முக் கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித் தார்.

படிக்க வேண்டும்

spot_img