தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இன்னொரு சிக்சரை இன்று விளா சியுள்ளது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல, மைதானத்தை தாண்டிப் போய் விழுந்துள்ளது பந்து. செமையான டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இந்த வரவேற்புக்கும், ஆரவாரத்திற்கும் காரணம்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபு ணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகிய ஐந்து தலை சிறந்த பொருளா தார நிபுணர்கள் தமழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.
சமீபத்தில், மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டபோது எழுந்த ஆரவாரத்தை விட இப்போது அதிக வரவேற்பு எழுந்துள்ளது. அதிலும் ரகுராம் ராஜன் நியமனம் ரொம்பவே முக்கியமானது. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அதிமுக்கியமானது.