fbpx
Homeபிற செய்திகள்ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா- சிறந்த மாணவர்களுக்கு தங்க பதக்கம்வழங்கினார் முன்னாள் ஆளுநர் சதாசிவம்

ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா- சிறந்த மாணவர்களுக்கு தங்க பதக்கம்வழங்கினார் முன்னாள் ஆளுநர் சதாசிவம்

ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியின் 2021-&22 ஆண்டிற்கான ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு முப்பெரும் விழாவாக நேற்று (1ம் தேதி) கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரியின் ஆண்டு மலரான ‘பார்ம சாகா’ (தொகுதி 29) வெளியிடப்பட்டது. கேரள முன்னாள் ஆளுநர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். கொரோனா தொற்று காலத்தில் மருந் தாளுநர்களின் சிறப்பான சேவைகளை குறிப்பிட்டு பாராட்டினார்.

பல்வேறு வகையான நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் மருந்தாளுநர் களின் பங்களிப்பின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார். பரிசு பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டிய பி.சதாசிவம் உலகில் சிறந்த துறைகளுள் ஒன்றான மருந்தாளுநர் துறையை தேர்ந்தெடுத்தமைக்கு அனைவரையும் பாராட்டி னார்.

இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்ப கழகத்தின், சர்வதேச பிரி வின் தலைவர், முனை வர் சஞ்சீவ் குமார் வர்ஷினி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு அரசு நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சிக்கான நிதியை பெற்ற பேராசிரியர்களுக்கு கல்லூரி சார்பாக பாராட்டு சான்றுகளை வழங்கினார்.

மருத்துவ ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்றும் அதில் மருந்தாளுனர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி தனது உரையில் விளக்கினார். மேலும், பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி மற்றும் தொற் றை கண்டறியும் பரி சோதனை கருவிகளின் கண்டுபிடிப்பில் மருந்தா ளுனர்களின் மகத்தான பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.

மைசூரு ஜெ எஸ் எஸ் மகாவித்யபீடத்தின் நிர்வாக செயலர் முனைவர் சி.ஜி.பெத் சூர்மத் இந்த முப் பெரும் விழாவிற்கு தலைமை தாங் கினார். அவர் தனது தலைமை யுரையில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைத்து, அவை ஜெ எஸ் எஸ் கல்வி நிறுவன்ங்களில் எவ்வாறு சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று விளக்கினார்.

கல்லூரிகளில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பின் முக்கியத்துவத்தையும், அத்தகைய சந்திப்பு ஆசிரிய-மாணவர் உறவை மேம்படுத்த உதவும் வகையையும் விளக்கினார்.

தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வா ணைய உறுப்பினர்கள் பி.கிருஷ்ண குமார் மற்றும் அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை, ஜெ.எஸ்.எஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் சுரிந்தர் சிங், மைசூரு ஜெ.எஸ்.எஸ் மகாவித்யபீடத்தின் நிதி மேலாண்மை இயக்குனர் புட்டசுபப்பா, கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போது அபு தாபியில் பன்னாட்டு நிறுவனத்தில் இயக்குனராக உள்ள ஜனார்தன் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக, கல்லூரி யின் முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் வர வேற்பு ரையாற்றினார். முனை வர்கள் கே.பி. அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகி யோர் கல்லூரியின் ஆண்டறிக் கையை வழங்கினர்.

கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், முனைவர்கள் பொன்னு சங்கர், கிருஷ்ணவேணி, சங்கர் ஆகியோர் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் விழாவிற் கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கல்லூரியின் துணை முதல் வர் முனைவர் அப்சல் அசாம் நன்றி கூறினார். மாலையில் சுமார் 150 முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்ட கூட்ட மும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற் றன.

படிக்க வேண்டும்

spot_img