fbpx
Homeபிற செய்திகள்ஜே.எஸ்.எஸ். கல்லூரி சார்பாக தேசிய அறிவியல் வார விழா

ஜே.எஸ்.எஸ். கல்லூரி சார்பாக தேசிய அறிவியல் வார விழா

ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், ஜேஎஸ்எஸ் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், மைசூருவின் கீழ், பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தது.

75-வது ஆண்டின் சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக, அறிவியலின் முக்கியத்துவத்தை நினைவுகூறவும், இந்திய அரசின் முன்முயற்சியான ஆசாதி கா அம் ரித் மஹோத்சவின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களிடையே அறிவியலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நீலகிரி மாவட்டம் ஆர்.வடிவேலன் மற்றும் வி.செந்தில் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். தேசிய அறிவியல் வார விழாக்களில் நான்கு நிகழ்ச் சியினை நடத்தினர்.

முனைவர் வடிவேலன் வரவேற்றார். ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், தேசிய அறிவியல் தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.

ஊட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் விலங் கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறைத் தலைவர் முனைவர் ஜே.எபினாசர், மாணவர் சமுதாயத்தின் நலனுக்காக, “நிலையான எதிர்காலத்திற்கான அறி வியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை” என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் வி.செந்தில் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img