fbpx
Homeபிற செய்திகள்டொயோட்டா ஹைலக்ஸ் காரின் விலை ரூ.33,99,000

டொயோட்டா ஹைலக்ஸ் காரின் விலை ரூ.33,99,000

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM), புகழ்பெற்ற ஹைலக்ஸ் காருக்கு ‘ஒரு தேசம், ஒரே விலை’ என்ற அடிப்படையில் ரூ.33,99,000/- (4*4 விஜி ஸ்டான்டர்டுக்கு எக்ஸ் ஷோரூம் விலை) விலை நிர்ணயித்து அறிவித்திருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் – ன் செயலாக்க துணைத்தலைவர் தடாஷி அஸாஜுமா கூறியதாவது: ‘வாடிக்கையாளருக்கே முதன்மை’ என்ற அணு குமுறை மற்றும் மக்களின் லைஃப்ஸ்டைலிலிருந்து உத்வேகம் பெற்று முற்றிலும் புதிய லைஃப் ஸ்டைல் பிரிவில் வெளி வரும் ஹைலக்ஸ், ‘அனை வருக்கும் மாபெரும் மகிழ்ச்சி’ என்பதை வழங்கு வதற்கான ஒரு முன்னேற்ற செயல் நடவடிக்கையாகும்.

உலகத் தரத்திலான பொறியியல், நிகரற்ற பாதுகாப்பு, மிகச்சிறந்த சௌகரியம் ஆகிய அனைத்து அம்சங்களின் நேர்த்தியான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் டொயோட்டா ஹைலக்ஸ், சாகசம், கிளர்ச்சியை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிற நபர்களுக்காகவும் மற்றும் குடும்பத்தோடும், நண்பர்களோடும் என்றும் நிலைத்திருக்கும் பசுமையான பதிவுகளை உருவாக்க விரும்புபவர்களுக்கும் மிகப்பொருத்தமான, லைஃப் ஸ்டைல் யுடிலிட்டி வாகனமாக இருக்கிறது என்றார்.

உலகளவில், 180-க்கும் அதிகமான நாடு களில், லட்சக்கணக் கானவர்களின் இதயங்க ளை வென்றிருக்கின்ற ஹைலக்ஸ் காரின் விற்பனை 20 மில்லியன் யூனிட்டுகளையும் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

சக்தி வாய்ந்த செயல் திறனுக்கு உல களவில் ஹைலக்ஸ் பெற்றிருக்கும் நற்பெயருக்கு அதன் திடகாத்திரமான, புதுமையான பல்நோக்கு வாகன (IMV) பிளாட்ஃபார்ம் மற்றும் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் சக்தி வாய்ந்த பவர்ட்ரெயின் சிஸ்டம் ஆகியவையும் ஒரு காரணமாகும்.

6-வேக ஆட்டோமேட்டிக் அல்லது 6 – வேக மேனுவல் டிரான்ஸ் மிஷன் என்ற விருப்பத் தேர்வுகளிலும் இது கிடைப்பது இதன் சிறப்பை உயர்த்துகிறது. சக்தி வாய்ந்த இன்ஜின், திடகாத்திரமான தாங்கும் திறன், குறைவான பராமரிப்பு செலவு மற்றும் பல்வேறு உபயோகங்களுக்கும் பொருத்தமான சிறப்பான நடைமுறைத்திறன் என் பவற்றையும் சேர்த்து வழங்குகிறது.

இதற்கும் கூடுதலாக, 700 மி.மீ. ஆழம் வரை நீரில் பயணிக்கக்கூடிய ஹைலக்ஸின் திறன், இந் தியாவில் சாலைகளற்ற பகுதிகளிலும், ஓடை கள், நீர்நிலைகள் போன்றவற்றிலும் இயக்கப்படுவதற்குப் பொருத்தமானதாக இதனை ஆக்குகிறது.

இதன்மூலம் சாலைகளற்ற தரைப்பரப்புகளுக்கான வாகன இயக்கத்திறனில் புதிய தரநிலைகளை ஹைலக்ஸ் நிறுவியிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img