தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை யிலான புதிய அரசு மே 7ம் தேதி அமைய உள்ளது. இந்த நிலையில் வெற்றி விழா கொண்டாட்டம் கோவை மாநகர மாவட் டம் 22வது வட்ட கழகத்தின் சார்பாக சாய்பாபா காலனி பகுதியில் கொண்டா டப்பட்டது.
பொதுக்குழு உறுப் பினர் வழக்கறிஞர் மகு டபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் காலனி வினோத், தளபதி மோசஸ்.,வழக்கறிஞர் ஜெரோம்,சிவக்குமார் பாஷா பாய், எஸ் என் ரவி. பாலன் .பகவான் அஸ்வின். கனகராஜ் ஷேக் முஹம்மத் ரமேஷ். மாரீ. அகதீஸ்வரன் அசோக் வினித்,எல்ஐசி செந்தில், விஜயகுமார் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.