fbpx
Homeபிற செய்திகள்தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் கிருஷ்ணகிரியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் கிருஷ்ணகிரியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.

மாநிலக்குழு உறுப் பினர் கண்ணு, சிபிஐ ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய லாளர் பழனி, மாவட் டக்குழு உறுப்பினர் சங்கர், நகர துணை செயலாளர் முனியன், நகர செயலாளர் உபேத், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் குப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட செல வுக்கு ரூ.2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலுவை இல்லாமல் சம்பளம் வழங்க வேண் டும். நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு நூறு நாள் வேலை பெறும் உரிமையை 200 நாட் களாக அதிகப்படுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் காலை 9 மணிக்கு வருகை பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் உட் பட விவசாயத் தொழி லாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க தனி ஓய்வூதியம் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

விவசாய தொழிலாளர் வாழ்க்கையை ஆய்வு செய்ய முத்தரப்புப் பிரதி நிதிகள் கொண்ட உயர் மட்டக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடில்லா நிலமற்ற குடும்பங்களுக்கு 400 சதுர அடியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

படிக்க வேண்டும்

spot_img