தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பி.கார்த்திகா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமுதவள்ளி, கண்காணிப்பாளர் சிவக்குமார், இளங்கோவன், இருப்பிட மருத்துவர் சந்திரசேகர், நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.