fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இது வரை 75,751 பயனாளிகளுக்கு சிகிச்சை

தருமபுரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இது வரை 75,751 பயனாளிகளுக்கு சிகிச்சை

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75,751 பயனாளிகள் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவையினை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

ஏழை, எளியோர், வயதான முதியோர்கள், இயலாதோரின் இருப்பிடத்திற்கே பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத்‌ தன்னார்வலர்கள்‌, இயன்முறை மருத்துவர்‌, நோய்‌ ஆதரவுச்‌செவிலியர்கள், இடைநிலை ‌சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் ‌நேரில் சென்று பரிசோதனை செய்து, தொற்றா நோய் சேவைகளை வழங்குகின்றனர்.

களஅளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளை வழங்கும் உயிர் காக்கும் உன்னத திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற அற்புதமான திட்டத்தினை நிறைவேற்றித் தந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் துயரங்களை துடைக்கும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழ்கிறது.

முதல்வர் ஏழு உறுதிமொழிகள் என்ற பத்தாண்டுத் தொலைநோக்கு திட்டத்தில் ‘அனைவருக்கும் நல்வாழ்வு’ என்பது ஒரு முக்கிய உறுதிமொழியாக கொண்டு, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மருந்துப் பெட்டகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் 5.8.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 258 கோடி ரூபாய் செலவில், ‘மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்’ என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு சென்று மருந்துப் பெட்டகத்தை வழங்கினார்.

தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியா ளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய் களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங் குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்’ முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இன்று கிராமப் பகுதிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரையுள்ள அனைத்து பகுதிவாழ் மக்களும் பயன்பெறும் வகையில், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகிய களப்பணியாளர்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஒவ்வொரு பயனாளியும் மக்கள் நலப் பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுவது இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

தமிழ் நாட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் மொத்தம் கள அளவில் 10,969 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் (Women Health Volunteers 385 இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapists) , 385 நோய் ஆதரவுச் செவிலியர்(Pallative Nurses), , 4848 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் (Mid Level Health Provider) ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர்.

அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 2432 ‘மக்களைத்தேடி மருத்துவ செவிலியர்கள்’ தொற்றா நோய் சேவைகளை வழங்குவதோடு, களஅளவில் கண்டறியப்பட்டு பரிந் துரைக்கப்படும் நபர்களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளை வழங்குகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் கள அளவில் 225 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் (Women Health Volunteers) 8 இயன்முறை மருத்துவர்கள் (Pallative Nurses, 8 நோய் ஆதரவுச் செவிலியர் Pallative Nurses),), 147 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் (Mid Level Health Provider) ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர்.

அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 61 ‘மக்களைத்தேடி மருத்துவ செவிலியர்கள்’ தொற்றா நோய் சேவைகளை வழங்குவதோடு, பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந் தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்குவதோடு, களஅளவில் கண் டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர் களுக்கு தொற்றா நோய்களுக்கான தொடர் சேவைகளையு-ம் வழங்கு கின்றனர்.விபத்து முடக்கியது,
திட்டம் பேருதவி புரிந்தது

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பிக்கனஅள்ளி பகுதியைச் சார்ந்த அண்ணாதுரை (வயது 50) த/பெ காசி தெரிவித்ததாவது:

நானும் எனது மனைவியும் கூலி வேலை செய்து வருகிறோம். எனக்கு கடந்த 5 வருடங்களாக நீரிழிவு நோயும் இரத்த அழுத்த நோயும் உள்ளது. மாதந்தோறும் சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதால், நான் ஒரு நாள் கூலியை இழக்கும் சூழ்நிலை இருந்தது.

தற்போது ஒரு விபத்தில் இடது காலில் பலத்த காயம் ஏறப்பட்டதால் என்னால் மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை.

தற்போது முதல்வர் எங்களை போன்ற நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற சீரிய திட்டத்தினை வழங்கியுள்ளார். இதன் மூலம் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத்‌ தன்னார்வலர்கள்‌, இடைநிலைச் ‌சுகாதாரச்‌செவிலியர், இயன்முறை மருத்துவர்‌, நோய்‌ ஆதரவுச்‌செவிலியர் ‌எங்கள் இருப்பிடத்திற்கே நேரில் வந்து பரிசோதனை செய்து, உரிய மருந்துகளை வழங்குகின்றனர். இத்திட்டமானது இந்த வயதான காலத்தில் எங்களுக்கு பேருதவியாக உள்ளது.

‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான திட்டத்தினை வழங்கி எங்களைப் போன்ற கிராமத்தில் வசிப்பவர்களையும், வயதானவர்களையும் பாதுகாத்துவரும் முதல்வருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இது வரை
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 41,321 நபர்கள் உயர் இரத்த அழுத்த சிகிச்சை (HT) பெறும் பயனாளிகளாகவும், 17,388 நபர்கள் நீரழிவு நோய் சிகிச்சை ((DM) பெறும் பயனாளிகளாகவும், 7,979 நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் சிகிச்சை (Both) பெறும் பயனாளிகளாகவும், 4,402 நபர்கள் இயன்முறை சிகிச்சை (Physiotherapy) பெறும் பயனாளிகளாகவும், 4,661 நபர்கள் நோய் ஆதரவு சேவை (Palliative) பயனாளிகளாகவும் என மொத்தம் 75,751 பயனாளிகள் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவையினை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

வருமானமும் இழப்பில்லை
நோய்க்கும் மருந்து வந்தது
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ் (வயது 65), த/பெ.கோவிந்தகவுண்டர் தெரிவித்ததாவது:

நானும் எனது மனைவியும் கூலி வேலை செய்து வருகிறோம். எனக்கு கடந்த 5 வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. எனது மகனுக்கு போதிய வருமானம் இல்லாததால் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது.

மாதந்தோறும் சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதால் நான் ஒரு நாள் கூலியை இழக்கும் சூழ்நிலை இருந்தது.
இத்தைகய கடுமையான சூழலில் இருந்து எங்களை மீட்டெடுக்கும் திட்டமாக முதல்வரின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண் ‌சுகாதாரத்‌ தன்னார்வலர்கள்‌ இடை நிலைச்‌ சுகாதாரச்‌ சேவையாளர் ‌‌எனது வீட்டிற்கே நேரில் வந்து பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

எனது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. கிராமத்தில் வசிக்கும் கடைகோடி மக்களும் பயனடையும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற பொன்னான திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு எங்கள் கிராம மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மூட்டு வலியால் அவதி, வீட்டுக்கே வந்த மருந்தால் தேறினேன்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட உழவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கந்தம்மாள் (வயது 55), க/பெ.முனிராஜ் தெரிவித்ததாவது:

எனக்கு கடந்த 4 வருடங்களாக உயர் இரத்த அழுத்த நோய் உள்ளது. இருப்பினும் என்னால் மருத்துவமனைக்கு சென்றுவர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் எனக்கு கடுமையான மூட்டு வலி உள்ளதால் பேருந்து வசதியை பயன்படுத்த முடியவில்லை.

என் மகள் மற்றும் மகன்களும் வேறொரு மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அதனால் என்னுடைய நிலை மிகமோசமான நிலையை அடைந்தது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இயலாததாலும் தேவையான சிகிச்சை மேற்கொள்ள இயலாததாலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு உள்ளாக நேரிட்டது.

அப்போது தான் தமிழக முதல்வரின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் எனது இல்லத்திற்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடை நிலை உதவி செவிலியர், இயன்முறை மருத்துவர் என் உடல் நிலையை பரிசோதித்து அதற்கான மருந்துகளை வழங்கினார்கள்.

இப்போது என் உடல் நிலை மிக நல்ல நிலையில் உள்ளது. இதே போன்று என் கிராமப் புறத்தில் என் உறவினர்களும், நண்பர்களும் பயனடைகிறார்கள். இந்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை ஏற்படுத்தி என்னைப் போன்ற கிராமப்புற மக்களை பயனடையச் செய்த முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.

அழைத்துச் செல்ல யாருமில்லை, இப்போ இல்லை பிரச்சனை
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயனடைந்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 65), த/பெ.பெருமாள் தெரிவித்ததாவது: எனக்கு 4 மகன்கள் உள்ளனர்.

ஆனால் அனைவரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் தங்கி வசித்து வருகின்றனர். நானும் எனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம். எனக்கு கடந்த 6 மாதங்களாக நீரிழிவு நோய் உள்ளது. நான் எனது சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு உடன் யாரும் இல்லை. எங்களின் இந்த சிரமமான சூழ்நிலையினை அறிந்து, முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் என்னைப் போன்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்பு உடையவர்களுக்கு வீடுகளுக்கே நேரில் வந்து பரிசோதனை மேற்கொண்டு, இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குகின்றனர்.

வயதான கை, கால் முட்டி பாதிக்கப்பட்டு நடக்க இயலாதவர்களுக்கு இயன்முறை சிகிச்சையாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகு சிறப்பான திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தின் மூலம் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று ஏழை எளியோர், வயதான முதியோர்கள், இயலாதோரின் துயரங்களை துடைத்து, அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழ்ந்து வருகிறது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்னும் மகத்தான திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் தருமபுரி மாவட்ட பயனாளிகள் முதல்வர் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img