fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

கிராம சபை கூட்டம் போல தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளில் அந்தந்த பகுதி கவுன் சிலர் தலைமையில் வார்டு கமிட்டி அமைத்து வார்டு வாரியாக பகுதி சபை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து நாடுகளிலும் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது.

அந்தந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் தலைமை தாங்கினார். கூட்டங்களில் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கூட்டணி நடவடிக் கைகளை பார்வையிட்டு பொது மக்களின் கோரிக்கைகளை பதிவு செய்தனர்.

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளை நி¬ றவேற்றக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஒரு சில பகுதிகளில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் விவாதத்திலும் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரான தர்ம புரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் நேற்று கவுன் சிலர்கள் தலைமையில் பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது.

27-வது வார்டில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

நகராட்சி அலுவலர் குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பதிவு செய்தார். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோன்று 29 -வது வார்டில் நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண் டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் தலைமையில் முதன்முறையாக பகுதி சபை கூட்டங்கள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img