fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி ரயில்நிலைய சாலையில் ரூ.34 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

தர்மபுரி ரயில்நிலைய சாலையில் ரூ.34 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

தர்மபுரி ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் நகராட்சி சார்பில் ரூ. 34 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கி புதிய தார் சாலை அமைப்பு பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி சிவசங்கர், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத் தினம், துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img