fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் ரமணா பள்ளி அருணை நகர் இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.45 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணியினையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஆடையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9.07லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சிக்குட்டை அமைக்கும் பணியினையையும் மற்றும் மேல திக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.83 லட்சம் மதிப் பீட்டில் முடிவுற்ற நூலக கட்டடம் மறு சீரமைப்பு பணியினையும், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து உடையானந்தல் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் நடை பெற்று வருவதையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.எஸ்.லட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img